விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!


விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கொலை' திரைப்படத்தின் டிரைலர் சுதந்திரதினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Next Story