புதிய சாதனை படைத்த வாரிசு படத்தின் பாடல்..! ரசிகர்கள் உற்சாகம்


புதிய சாதனை படைத்த  வாரிசு படத்தின்    பாடல்..! ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 29 Dec 2022 5:35 PM IST (Updated: 29 Dec 2022 8:54 PM IST)
t-max-icont-min-icon

இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) பாடல் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பில்போர்ட்டின் ஹாட் டிரெண்டிங் சாங்க்ஸ் வழங்கும் டுவிட்டர் சார்ட்டில் சோல் ஆஃப் வாரிசு பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


Related Tags :
Next Story