ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த திரிஷா- வீடியோ வைரல்


ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த திரிஷா- வீடியோ வைரல்
x
தினத்தந்தி 23 April 2024 4:00 AM (Updated: 23 April 2024 6:08 AM)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தனது ரசிகர்களை திரிஷா சந்தித்துள்ளார்.

சென்னை,

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து திரிஷா லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இந்த படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், திரிஷா மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அகில் பால் - அனஸ்கான் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஈரோட்டில் நடந்து வருகிறது. அங்கு திரிஷா தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். இது குறித்தான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடிக்கிறார்.


Next Story