சுந்தர்.சி நடிக்கும் 'தலைநகரம் 2' படத்தின் டிரைலர் வெளியானது..!


சுந்தர்.சி நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர் வெளியானது..!
x

சுந்தர்.சி நடித்துள்ள 'தலைநகரம் 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தலைநகரம் 2' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Next Story