சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' படத்தின் டிரைலர் வெளியானது..!


சித்தார்த் நடித்துள்ள சித்தா படத்தின் டிரைலர் வெளியானது..!
x

நடிகர் சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'சித்தா' திரைப்படம் வருகிற 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story