அசோக் செல்வன் நடித்துள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் டிரைலர் வெளியானது


அசோக் செல்வன் நடித்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது
x

'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

சென்னை,

அசோக் செல்வன் தற்போது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திருமலை தயாரித்துள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story