அருள்நிதி நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் வெளியானது..!


அருள்நிதி நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர் வெளியானது..!
x

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அருள்நிதி தற்போது 'ராட்சசி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சை கவுதமராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு 'கழுவேத்தி மூர்க்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கழுவேத்தி மூர்க்கன்' படம் வருகிற மே மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story