விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!


விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
x

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story