ஹபீஸ் சயீது வேடத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாநவாஸ் பிரதான் விருது வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சரிந்து காலமானார்.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் நடந்த விருது வழங்க கூடிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஷாநவாஸ் பிரதான் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை மற்றவர்களிடம் கூறி விட்டு, சரிந்து உள்ளார். சுயநினைவையும் இழந்து உள்ளார்.
உடனடியாக அவரை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடன் இருந்தவர்கள் கொண்டு சென்று உள்ளனர். எனினும், மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்து விட்டனர். அவருக்கு வயது 56. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் நடந்து உள்ளது என கூறப்படுகிறது.
நடிகர் சைப் அலி கான் முன்னணி வேடமேற்று நடித்த பாந்தோம் என்ற படத்தில் அவர் நடித்தபோது, மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீது வேடமேற்றார். இதனால், அப்போது அவருக்கு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
எம்.எஸ். தோனி தி அன்டோல்டு ஸ்டோரி (2016), லவ் சுதா (2016), ரேயீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். கடைசியாக, குடா ஹபீஸ் (2020) என்ற படத்தில் நடித்து உள்ளார். தொலைக்காட்சி தொடர் மற்றும் ஓ.டி.டி. தளங்களில், வலைதள தொடர்களிலும் அவர் நடித்து உள்ளார். பிரபல மிர்சாப்பூர் என்ற வலைதள தொடரிலும் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்து உள்ளார்.