தியேட்டரில் படம் பார்ப்போர் எண்ணிக்கை குறைகிறது - கவிஞர் வைரமுத்து வருத்தம்


தியேட்டரில் படம் பார்ப்போர் எண்ணிக்கை குறைகிறது - கவிஞர் வைரமுத்து வருத்தம்
x

கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை தங்கர் பச்சான் டைரக்டு செய்துள்ளார். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர். கவுதம்மேனன், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார்.

இந்த படத்தின் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசும்போது, "ஒரு படம் தயாரிப்பது துயரமான சம்பவம். ஒரு முட்டையின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பது போலத்தான் இப்போது சினிமா இருக்கிறது. தங்கர் பச்சானிடம் பிடித்த விஷயம், எதைக் கண்டாலும் ஆச்சரியப்படுவார்.

ஆச்சரியம் தீர்ந்துபோகும் போது வாழ்க்கைத் தீர்ந்து போகிறது. ஆச்சரியத்தால் வாழ்க்கை பரிணமிக்கும், ஆச்சரியம் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த படத்தை நீங்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறும் போது வருத்தமாக இருக்கிறது.

ஒரு திரைப்படத்தை, திரையரங்கிற்கு சென்று பார்க்கிறபோது தான் திரைப்படம் பொது மக்களின் கலையாக இருக்கும். தயாரிப்பாளர் வீரசக்தி, தங்கர் பச்சான் வெற்றிபெற வேண்டும்.

இளையராஜாவின் இசை இன்னும் தீர்ந்து போகவில்லை. பழையதாகவில்லை. தமிழ் திரையுலகம் அவரது பணியை வாங்கி வைத்துக்கொள்ளாமல் ஏன் தூங்குகிறது என தெரியவில்லை. மிகச் சிறந்த இயக்குனர்கள் இவரை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.


Next Story