"தி லெஜண்ட்" திரைப்படம் ஜூலை 28-ந் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு


தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28-ந் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
x

“தி லெஜண்ட்” திரைப்படம் ஜூலை 28-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ட்ரெய்லர் 29 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூலை 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி 'ஒரு லெஜண்டாக' எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் பெற்றிருக்கிறார்.


Next Story