'தி கோட்' திரைப்படம் - வைரலாகும் விஜய்காந்தின் ஏஐ தோற்றம்


தி கோட் திரைப்படம் - வைரலாகும் விஜய்காந்தின் ஏஐ தோற்றம்
x

'தி கோட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனத்தை ஈர்த்தன. படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

'தி கோட்' திரைப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் ஏஐ தோற்றத்தை படக்குழுவினர் உபயோகித்திருக்கின்றனர். இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் விஜயகாந்தைதான் தாங்கள் ஏஐ மூலம் உருவாகி இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தற்போது, விஜயகாந்தின் ஏஐ புகைப்படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story