படமான வாழ்வியல் கதை


படமான வாழ்வியல் கதை
x

'நெடுமி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக பிரதீப் செல்வராஜ், நாயகியாக அபிநயா நடித்துள்ளனர். ஏ.ஆர்.ராஜேஷ், பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி மற்றும் தினேஷ் டேவிட், முரளிதரன், வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். `குட்டிப் புலி' படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்தப் படத்தை நந்தா லட்சுமன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே இசை ஆல்பம், குறும்படங்கள் எடுத்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ''சுனாமி, புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.

அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வியலை பேசும் படமாக தயாராகி உள்ளது. பனைமரங்களை காப்பாற்ற வேண்டும் என்பதையும் படம் வலியுறுத்தும்'' என்றார். எம்.வேல்முருகன் தயாரித்துள்ளார். இசை: ஜாஸ் ஜே.பி, ஒளிப்பதிவு: விஷ்வா மதி.


Next Story