நடிகையான ஆசிரியை
விஜய் சேதுபதியின் ``யாதும் ஊரே யாவரும் கேளிர்'' படத்தில் நடித்தவர் மதுரா. ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் வக்கீலுக்கு படித்து, அங்குள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்று கிறார். பரத நாட்டியம், கர்நாடக சங்கீதமும் கற்றுள்ளார்.
மதுரா கூறும்போது, ``என் அம்மா இலங்கை யாழ்ப்பாண தமிழ் பெண். அப்பா ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்தேன், தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். `யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனைகளையும் சொல்லும் கதை என்பதால், என்னால் உணர்வுப்பூர்வமாக புரிந்து கொண்டு நடிக்க முடிந்தது. அந்த படத்தில் நடித்தது பெருமை'' என்றார். தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
Related Tags :
Next Story