தமிழ்ப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை


தமிழ்ப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை
x

தமிழ்ப்பட நடிகை நடிகை தேஜஸ்வி மடிவாடா அளித்த பேட்டியில் நானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு பாலியல் ரீதியாக அழைப்புகள் வந்தன’’ என்றார்.

திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூ வில் புகார் தெரிவித்து வருகிறார்கள். முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மீ டூ சர்ச்சையில் சிக்கி உள்ளனர். பட உலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதை பிரபல தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடாவும் உறுதிப்படுத்தி உள்ளார். இவர் தமிழில் 'நட்பதிகாரம் 79' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கமிட்மெண்ட்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தேஜஸ்வி அளித்துள்ள பேட்டியில், ''வாய்ப்புகளுக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமாவில் மட்டும்தான் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் எனது தோழிகள் இது போன்ற தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது எனக்கு தெரியும். சினிமாவில் மட்டும் படுக்கைக்கு அழைப்பது என்பது பிரபலமாகி விட்டது. நானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு பாலியல் ரீதியாக அழைப்புகள் வந்தன'' என்றார்.


Next Story