நானியின் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!


நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!
x

நடிகர் நானி நடிப்பில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டிடிவி நிறுவனம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 29 ம் தேதி) வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.24.11 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. நானியின் தசரா படத்தின் வசூலினை (ரூ.38 கோடி) இந்தப் படம் முறியடிக்க தவறியிருந்தாலும் அடுத்தடுத்த நாள்களில் படத்தின் வரவேற்பு அதிகரிக்கும் என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story