திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா


திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்த பின்னணி பாடகி பி.சுசீலா
x

பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா, திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை,

இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் 'பெற்றதாய்' படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.


மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தற்போது 88 வயதாகும் இவர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முடி காணிக்கை கொடுத்து தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

. 2 பேரின் துணையுடன் நடக்க முடியாமல் வந்த பி.சுசீலா, முடி காணிக்கை செலுத்திவிட்டு, சாமி தரிசனம் செய்தார்.மேலும் நாராயண மந்திரம் பாடலை மூச்சிறைக்க பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சுசீலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story