சினிமா மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் ஆணாதிக்கத்தில் தான் உள்ளது- சுருதிஹாசன்
ஆண் மேலாதிக்கம் குறித்து சுருதிஹாசன் அதிர்ச்சிகரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்
மும்பை
7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன்.தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இவரும் ஒன்று. பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை சுருதிஹாசன், பிரபாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் படம் நடித்து வருகிறார் .
சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு சினிமா துறையில் ஆணாதிக்கம் தான் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ் பெண்கள், சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், சினிமாவை மட்டும் ஒதுக்குவது ஏற்புடையதல்ல என்றும், உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பே திரையுலகம்
பாலியல் தொந்தரவு தரும் சூழலும் உள்ளது. இதையெல்லாம் மீறித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது.
நட்சத்திரக் குழந்தைகளுக்கு பட வாய்ப்புகள் எளிஅதா கிடைக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெற்றோர்கள் தொழில்துறையில் நுழைவதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறார்கள். அதன் பிறகு, அவர்கள் துறையில் வாழ அவர்களுக்கு சொந்த திறமை இருக்க வேண்டும். நான் சினிமாவில் நுழநித சமயத்துல எனக்கு யாரும் சிபுஆரிசு செய்யவில்லை இப்பவும் என சொந்த காலில் தான் நிற்கிறேன்.
இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன, என்று சுருதிஹாசன் கூறினார்.