தொடர்ந்து வசூலை குவிக்கும் ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம்
'டங்கி' திரைப்படம் கடந்த 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள்.
'டங்கி' திரைப்படம் கடந்த 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'டங்கி' திரைப்படம் ரூ.323.77 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.