'கண்ணப்பா' படத்தில் சரத்குமாரின் சிறப்பு தோற்றம் வைரல்


கண்ணப்பா படத்தில் சரத்குமாரின் சிறப்பு தோற்றம் வைரல்
x

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமாரின் சிறப்பு தோற்றம் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.


இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிவனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்சய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படத்தில் மோகன்பாபு, சரத்குமார், காஜல் அகர்வால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.


சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்தநிலையில், படக்குழு நடிகர் சரத்குமாரின் தோற்றம் மற்றும் பாத்திரம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சரத்குமார், நத்தநாடு பீம சேனா பெயரில் கோயாலு பழங்குடியினரின் தலைவனாக இருக்கும் பதிவினை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story