புதிய அவதாரம் எடுக்கும் சாண்டி... மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!


புதிய அவதாரம் எடுக்கும் சாண்டி... மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...!
x
தினத்தந்தி 16 Nov 2023 9:39 PM IST (Updated: 16 Nov 2023 9:40 PM IST)
t-max-icont-min-icon

நடன இயக்குனர் சாண்டி நடிக்கும் 'ரோசி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி. இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த 'லியோ' படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் சாண்டி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் அந்த படத்திற்கு 'ரோசி' என பெயரிடப்பட்டுள்ளது. கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்டாள் என்ற பெண் கதாபாத்திரத்தில் சாண்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கன்னட மொழி போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதே போல தமிழ் மொழி போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டார். இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story