சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி


சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
x

நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல் துறை உரிமம் வழங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சல்மான்கான் 1998-ல் படப்பிடிப்பின்போது ஜோத்பூர் காட்டில் அரிய வகை மானை வேட்டையாடியதாக சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த அரிய வகை மான்களை பிஷ்னோய் சமூகத்தினர் புனிதமாக கருதுவதால் அப்போதே சல்மான்கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். ஆனாலும் அவரது ஆட்கள் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டுக்கொன்றனர்.

இதுபோல் சல்மான்கானை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இதையடுத்து சல்மான்கான் தனது சொகுசு காரை சமீபத்தில் குண்டு துளைக்காத காராக மாற்றினார். காருக்குள் சில பாதுகாப்பு கருவிகளையும் பொருத்தி உள்ளார். அந்த காரிலேயே வெளியில் சென்று வருகிறார்.

கொலை மிரட்டல் இருப்பதால் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் வழங்க வேண்டும் என்று மும்பை போலீஸ் உயர் அதிகாரிகளை சல்மான்கான் கடந்த மாதம் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவை ஆய்வு செய்த போலீசார் தற்போது சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதித்து லைசென்ஸ் வழங்கி உள்ளனர்.


Next Story