சையிப் அலிகான்- கரீனா கபூர் விவாகரத்து?


சையிப் அலிகான்- கரீனா கபூர் விவாகரத்து?
x

சையிப் அலிகான் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த லிஸ்ட்டில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த நடிகர் தன்னுடைய மனைவி பெயர் அடங்கிய டாட்டூவை நீக்கி உள்ளதுதான். அதை செய்தது பாலிவுட் பிரபலம் சையிப் அலிகான் தான். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது.

இவர் கடந்த 1991-ம் ஆண்டு அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்தார் சையிப் அலிகான். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சையிப் அலிகான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இருப்பினும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்படுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் சையிப் அலிகானின் டாட்டூ தான். அவர் தன்னுடைய காதல் மனைவி கரீனாவின் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ குத்தி இருந்தார். ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டு சூலம் போன்ற டிசைனை டாட்டுவாக குத்தி இருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சையிப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story