தன்ஷிகா நடித்துள்ள 'தி புரூப்' படத்தின் புதிய பாடல் வெளியானது


தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் புதிய பாடல் வெளியானது
x

'தி புரூப்' படத்தின் புதிய வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திருடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. பேராண்மை படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தன்ஷிகா நடித்திருப்பார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தன்ஷிகா.

இவர் தற்போது கோல்டன் ஸ்டூடியோஸ்-23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். 'ஆக்சன்' படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரித்விகா, அசோக், ருத்வீர் வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜ சிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் 'தி புரூப்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

படம் வெளியாவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 'தி புரூப்' படக்குழு ஆசி பெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.


Next Story