2 பீஸ் உடையில் பாறையின் மேலே ஏறி டைவ் ; குளித்து கும்மாளம் போடும் அமலா பால்


2 பீஸ் உடையில் பாறையின் மேலே ஏறி டைவ் ; குளித்து கும்மாளம் போடும்   அமலா பால்
x
தினத்தந்தி 25 Feb 2023 1:56 PM IST (Updated: 25 Feb 2023 1:57 PM IST)
t-max-icont-min-icon

அமலா பால் 2 பீஸ் உடையில், குளித்து கும்மாளம் போடும், வீடியோ ஒன்றை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

சென்னை

கேரளாவை சேர்ந்த அமலாபால் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகி அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படம் அவரை முன்னணி நாயகியாக்கியது.

தொடர்ந்து அமலா பால். தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தெய்வத்திருமகள் படத்தில் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

குடும்பத்தார் சம்மதத்துடன் கரம்பிடித்த இவர்கள் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே திருமண பந்தத்தில் நீடித்திருந்தனர். பின் 2017 ஆம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

விவாகரத்துக்கு முன்னதாக இவர் நடித்த பசங்க 2, அம்மா கணக்கு, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும். விவாகரத்துக்கு பின்னர் இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக இவர் கதையின் நாயகியாக நடித்து வெளியான ஆடை படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டியது இவரின் கேரியருகே உலை வைத்தது. இதனை காரணம் காட்டி சில பட வாய்ப்புகளை அமலா பால் இழந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது தமிழில் அமலா பால் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'அதோ அந்த பறவை போல '. இப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மேலும் மலையாளம், இந்தி, போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படத்தை தாண்டி சில வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால் தற்போது 2 பீஸ் உடையில், குளித்து கும்மாளம் போடும், வீடியோ ஒன்றை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு இல்லாதா நாட்களில், கோவில்களுக்கு, மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது சென்றுள்ள இடத்தில் கொட்டும் அருவியில் குளிப்பது, பாறையின் மேலே ஏறி டைவ் அடிப்பது, நீச்சல் அடிப்பது, ஊஞ்சலில் ஜாலியாக ஆட்டம் ஓடுவது என அலப்பறை செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.




Next Story