ராகவா லாரன்சுடன் இணைகிறார் இயக்குனார் ரத்ன குமார்


ராகவா லாரன்சுடன் இணைகிறார் இயக்குனார் ரத்ன குமார்
x

இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ரத்ன குமார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் 'குலு குலு' திரைப்படம் வெளியானது. ரத்ன குமார் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து அவரது படத்திற்கு கதையும் எழுதி வருகிறார்.

தற்போது இருவரும் இணைந்து நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்திற்காக பணியாற்றி வருகின்றனர். 'தளபதி 67' படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை முடிப்பதில் லோகேஷ் கனகராஜுக்கு ரத்ன குமார் உதவுகிறார்,

இந்த நிலையில் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'ருத்ரன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் 'அதிகாரம்', 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.


Next Story