ஷாருக்கானின் பதான் திரைப்பட வெற்றி பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி - அகிலேஷ்


ஷாருக்கானின் பதான் திரைப்பட வெற்றி பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி - அகிலேஷ்
x

ஷாருக்கானின் பதான் திரைப்பட வெற்றி பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கான பதிலடி என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகர் ஷாருக்கான். இவர் நடித்து கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பதான். இப்படம் வெளியாகி 5 நாட்களில் 500 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, ஷாருக்கான் - தீபிகா படுகோனே நடித்து வெளியாகியுள்ள பதான் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் அணிந்துள்ள பிகினி உடை மத உணர்வை புண்படுத்துவதாகவும், பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறி வந்தன. ஆனால், பல்வேறு தடைகளை மீறி பதான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், ஷாருக்கானின் பதான் திரைப்பட வெற்றி குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பதான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றுள்ளது. இது இந்தியாவும், உலகம் கொண்ட நேர்மறையான சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. இது பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி' என்றார்.


Next Story