ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'ஓப்பன்ஹெய்மர்' என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இது அணுகுண்டுவின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன் ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'பயோபிக்' படம் ஆகும்.
உலகம் முழுவதும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த படத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனும், கதாநாயகியும் வரும் நெருக்கமான காட்சிகளில் 'உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்' என்ற பகவத் கீதை வசனம் இடம்பெற்று இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
'இதுபோன்ற காட்சிகளில் பகவத் கீதை வரிகளை எப்படி வைக்கலாம். ஏன் இது போன்ற காட்சிகளை கட் செய்யவில்லை?' என்று இந்திய சென்சார் போர்டுக்கு, ரசிகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த படத்தை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எதிர்ப்புக்குரல் கிளம்பியிருக்கிறது. இதனால் படத்தில் வரும் குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்கலாமா? என்பது குறித்து சென்சார் போர்டு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.