ஜப்பானில் வெளியாகும் 'ஓப்பன்ஹெய்மர்'


ஜப்பானில் வெளியாகும் ஓப்பன்ஹெய்மர்
x

அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் வந்தது.

டோக்கியோ,

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓப்பன்ஹெய்மர்' ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் வந்தது.

இதில் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்து இருந்தார். இது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிகொண்ட காரணமாக இருந்த அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஜே.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை படம் என்பதால் ஜப்பானில் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. அங்கு படத்துக்கு எதிர்ப்பும் இருந்தது.

இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு வருகிற 29-ந்தேதி ஜப்பானில் 'ஓப்பன்ஹெய்மர்' படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்தின் ஒரிஜினல் போஸ்டரில் ஹீரோவுக்கு பின்னால் இருந்த அணுகுண்டை நீக்கிவிட்டு புதிய போஸ்டரை வடிவமைத்து ஜப்பானில் வெளியிட்டு உள்ளனர். அணுகுண்டு இருக்கும் போஸ்டர் ஜப்பான் மக்களின் மனதை சங்கடப்படுத்தும் என்பதால் அதை நீக்கி உள்ளனர்.


Next Story