ஒரே கையெழுத்தில் நூறு கோடி நஷ்டம்...! உணர்ச்சிவசப்பட்ட அம்மா நடிகை சுதா...!


ஒரே கையெழுத்தில் நூறு கோடி நஷ்டம்...! உணர்ச்சிவசப்பட்ட அம்மா நடிகை சுதா...!
x

தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் கரைந்துவிட்டது. அப்பாவுக்குப் புற்று நோய் பற்றித் தெரிந்த பிறகுதான். அனைத்து சொத்துகளும் விற்கபட்டன.

ஐதராபாத்

தெலுங்கு சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ் பெற்ற நடிகை சுதா.நடிகை சுதா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தந்தையின் நோயால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை சுதா தனது கஷ்டமான வாழ்க்கையை பற்றி கூறி கண்ணீர் விட்டு கதறினார்.

அவர் கூறியதாவது:-

டைமண்ட் ஸ்பூனில் தான் பிறந்து வளர்ந்தேன். பெரிய வீடுகள், வேலையாட்கள் மற்றும் மூன்று டிரைவர்கள் நிறைந்த தனது குழந்தைப் பருவ வாழ்க்கை மிகவும் அசாதாரணமானது. நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். வீட்டில் நான் ஒரே மகள் என்பதால் நன்றாக வளர்த்தனர். அமிர்தம் என்ற பொருளில் என் தந்தை எனக்கு சுதா என்று பெயரிட்டார்.

ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது .தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் எங்களின் சொத்துக்கள் அனைத்தும் கரைந்துவிட்டது. அப்பாவுக்குப் புற்று நோய் பற்றித் தெரிந்த பிறகுதான். அனைத்து சொத்துகளும் விற்கபட்டன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை விற்று எங்களுக்கு உணவளித்தார்.எல்லாம் இருக்கிறது என்ற நிலையில் இருந்து ஒன்றும் இல்லாத நிலைக்கு வீழ்ந்தோம்.

ஆனால் அம்மா நாடகக் கலைஞராக இருந்ததால் என்னை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்தார். சினிமாவில் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது. ஒன்றுமில்லாமல் இருந்த போது எங்களை வெறுத்த உறவினர்கள் மீண்டும் எங்களை பார்க்க ஆரம்பித்தனர். குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியுடன் பல இன்னல்களையும் அனுபவித்தேன்.

நடிப்புக்கு பிறகும் ஆனால் மீண்டும், நான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. டெல்லியில் ஒரு ஓட்டலைத் திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன். ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் இன்னொரு வலி மகன் வடிவில் வந்தது. எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்று விட்டான். இப்போது என்னுடன் பேசவில்லை என நடிகை சுதா கண்ணீர் மல்க கூறினார். ஏற்கனவே கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாலும், மகனும் விலகி விட்டதாலும் நடிகை சுதா தனிமையில் இருக்கிறார்.

நடிகை சுதா 1979 திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீ விநாயக வியாசா'' படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். ஆரம்பத்தில் சில கதாநாயகி வேடங்களில் நடித்தார். 'கேங் லீடர்' படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் இளையதலைமுறைந் அடிகர்கள் அனைவருக்கும் அம்மாவாக நடித்து உள்ளார்.


Next Story