வங்காள தேசத்தில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியின் நடன நிகழ்ச்சிக்குத் தடை...! காரணம் என்ன?


வங்காள தேசத்தில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியின் நடன நிகழ்ச்சிக்குத் தடை...! காரணம் என்ன?
x

பாலிவுட் நடிகை நோரா பதேஹியின் நடன நிகழ்ச்சிக்குத் வங்காளதேசத்தில் தடைவிதிக்கபட்டு உள்ளது.

புதுடெல்லி

பாலிவுட் நடிகை நோரா, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லிச் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருள்களை வாங்கியவர். அவர் மொரோக்கோ மற்றும் கனடா வம்சாவளிகளைச் சேர்ந்தவர். 2014ம் ஆண்டில் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார் .

வங்காள தேசத்தில் பாலிவுட் நடிகை நோரா பதேஹியின் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நோராவின் நடன நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடப்பதாக இருந்தது. ஆனால் நோரா வங்காளதேசம் வந்து சென்றால் அவருக்குக் கட்டணமாக அமெரிக்க டாலரில் கொடுக்கவேண்டும்.

அமெரிக்க டாலர் கொடுத்தால் ஏற்கெனவே இருக்கும் டாலர் சேமிப்பு மேலும் குறைந்துவிடும் என்று கருதி நோராவின் நடன நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டுக் கலாசாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தற்போது இருக்கும் சூழ்நிலையில், அந்நியச் செலாவணியை போதிய அளவு பராமரிக்கவேண்டியிருக்கிறது. மத்திய வங்கி, நாட்டில் அமெரிக்க டாலரின் கையிருப்பு குறைந்து வருவதைக் கணக்கில் கொண்டு டாலர் மூலம் கட்டணம் கொடுப்பதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்நிய செலாவணி கையிருப்பை பராமரிக்கும் நோக்கத்தில் பதேஹிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தங்கள் முடிவை தெளிவுபடுத்தியுள்ளனர்


Next Story