'மாயோன்' படத்தின் புதிய அப்டேட் வெளியீடு
'மாயோன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது
சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடன் ஜூன் மாதன் வெளியான திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருந்தார். இதனை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.
பழங்கால கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் கதைக்களமாக உருவாகியிருந்த 'மாயோன்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,'மாயோன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியாகும் ஓடிடி தளம் குறித்து அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
#Maayon OTT Premiere from Aug 11th!@DoubleMProd_ @ManickamMozhi @DirKishore pic.twitter.com/zATmbHsgCy
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) August 9, 2023