புத்தாண்டுக்கு புது சர்ப்ரைஸ் கொடுத்த லால் சலாம் படக்குழு


புத்தாண்டுக்கு புது சர்ப்ரைஸ் கொடுத்த லால் சலாம் படக்குழு
x

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-இன் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.


Next Story