என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. மிரட்டலான சண்டை காட்சிகளுடன் வெளியானது கமல் படத்தின் அறிமுக வீடியோ...!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்திற்கு 'தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கு ''தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் பெயர் குறித்த அறிவுப்பு இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை 5 மணியளவில் மிரட்டலான சண்டை காட்சிகளுடன் அறிமுக வீடியோ வெளியானது. என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்... ஞாபகம் வச்சுக்கோங்க.. போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள 'தக் லைப்' படத்தின் அறிமுக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.