மூக்குத்தி அம்மன் 2: நயன்தாராவுக்கு பதில் இவரா?- வெளியான தகவல்

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் 2019-ம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படத்தில் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான படம் சிங்கப்பூர் சலூன். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், படத்தின் முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா இப்படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடந்த 2020 - ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.