தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்.. குடியரசு தினவிழாவில் பரபரப்பு
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் மன்சூர் அலிகான் தேசியக்கொடியை ஏற்றினார்.
சென்னை,
பிரபு நடித்த 'வேலை கிடைச்சிடிச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என்று மாற்றி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் மன்சூர் அலிகான் தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது அங்கிருந்தவர்கள் கொடி தலைகீழாக இருப்பதாக தெரிவித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட மன்சூர் அலிகான் கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.