நடிகர் விக்ரமின் 62வது படத்தில் இணைந்த மலையாள நடிகர்


நடிகர் விக்ரமின் 62வது படத்தில் இணைந்த மலையாள நடிகர்
x

விக்ரம் நடித்து வரும் சியான் 62 படத்தில் நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சியான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது படக்குழு வெளியிட்டிருக்கும் தகவல்படி பிரபல மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


Next Story