ஹரிஷ் கல்யாண் நடித்த `லப்பர் பந்து' படத்தின் டிரெய்லர் அப்டேட்


ஹரிஷ் கல்யாண் நடித்த `லப்பர் பந்து படத்தின் டிரெய்லர்  அப்டேட்
x

`லப்பர் பந்து' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் 'சில்லாஞ்சிறுக்கியே' முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில். தற்பொழுது படத்தின் டிரெய்லர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.


Next Story