புதிய சம்பவம் செய்யும் லோகேஷ்.. அப்டேட் கொடுத்த நரேன்


புதிய சம்பவம் செய்யும் லோகேஷ்.. அப்டேட் கொடுத்த நரேன்
x

கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியது.

இதைத்தொடர்ந்து, . 'கைதி 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'கைதி 2' திரைப்படம் விரைவில் உருவாகும் என கார்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், படம் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், 'கைதி', 'விக்ரம்' திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் 'கைது 2' எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு, "எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் 'கைது 2' வெளியாகும்" என்று தெரிவித்தார்

எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கைதி'. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', விஜய் நடித்த 'லியோ' போன்ற படங்கள் எல்சியூ-வில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story