'பிச்சைக்காரன்-2' படத்தில் இருந்து 'கோவில் சிலையே' பாடல் வெளியீடு


பிச்சைக்காரன்-2 படத்தில் இருந்து கோவில் சிலையே பாடல் வெளியீடு
x

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்-2’ படத்தில் இருந்து 'கோவில் சிலையே' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


#Pichaikkaran2 - https://t.co/W6Wpwq1HAH
கோயில் சிலையே Koyil Silaye#Bichagadu2 - https://t.co/WS9HjR8zVd
చెల్లి వినవే Chelli Vinave

Now on all streaming platforms
Listen and enjoy❤️ pic.twitter.com/X2PWG7nxMf

— vijayantony (@vijayantony) April 12, 2023 ">Also Read:



Next Story