கங்கனாவின் 'எமர்ஜென்சி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு


கங்கனாவின் எமர்ஜென்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
x

கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'சிங்கசன் களி கரோ' என்ற பாடல் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை உதித் நாராயண், நகாஷ் அஜிஸ் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோர் பாடியுள்ளனர்.


Next Story