கடவுள் கொடுத்த அழகுதான்... ! நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை...! நடிகை ஹனிரோஸ்


கடவுள் கொடுத்த அழகுதான்... ! நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை...! நடிகை ஹனிரோஸ்
x
தினத்தந்தி 25 July 2023 12:28 PM IST (Updated: 25 July 2023 12:52 PM IST)
t-max-icont-min-icon

ஹனி ரோஸ் அளித்த பேட்டியில் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி என் அழகை பராமரிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005 ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டியில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

ஹனி ரோஸ் அழகின் ரகசியம் அறுவை சிகிச்சைகள் தான் என்று சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். தற்போது அந்த விமர்சனங்களுக்கு ஹனி ரோஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து ஹனி ரோஸ் அளித்த பேட்டியில் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி என் அழகை பராமரிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

நான் எந்த அழகு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. கடவுள் தந்த அழகை தவிர என்னிடம் எதுவும் இல்லை. அழகைப் பராமரிக்க சில பவுடர்களை பயன்படுத்துகிறேன். இவை அனைத்தும் கண்டிப்பாக தேவை. நடிகையாக இருந்து, கிளாமர் துறையில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. நம் உடலைப் பராமரிப்பது பெரிய விஷயம். நம் உடலை அழகாய் படைப்பது கடவுளே' என கூறினார்.


Next Story