'இளம் வீரர்களை காப்பது நம் கடமை' - ஜி.வி.பிரகாஷ்


இளம் வீரர்களை காப்பது நம் கடமை - ஜி.வி.பிரகாஷ்
x

‘இளம் வீரர்களை காப்பது நம் கடமை’ என ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இளம் வீராங்கனை மறைவுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் நிகழ்த்தி உள்ளார். கால்பந்து பயிற்சியின்போது பிரியாவுக்கு காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் வலி குறையாததால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு காலில் தசைகள் அழுகிய நிலையில் இருப்பதாக கூறி கால் அகற்றப்பட்டன. அதன் பிறகு சிகிச்சை பலன் இன்றி பிரியா மரணம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவில், ''என் 'கேம்' என்னை விட்டு போகாது, 'கம்பேக்' குடுப்பேன். தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள். அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை" என்று கூறியுள்ளார்.


Next Story