அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகல் உண்மைதானா...?
ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் இடம் பெற்றதால் நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்ற ஹேஷ்டேக் நெட்டிசன்களால் டிரெண்டாகி வருகிறது.
சென்னை
சென்னை சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2018ல் வெளியானது இப்படம் . விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ரெண்டு காதல்.
அஜித்தின் ஏகே62 அவருக்கு அடுத்த ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது.கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் படத்தை இயக்க கமிட்டாகியிருந்தார் விக்னேஷ் சிவன். அதன்பிறகு 8 மாத இடைவெளிக்குப் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தார்.
அஜித் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற உற்சாகத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன். கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று விக்கி பதிவிட்டு இருந்தார்.
இந்த 8 மாத இடைவெளியில் அஜித் படத்திற்காக விக்னேஷ் சிவன் தயாரித்த ஸ்கிரிப்ட் அஜித்தை வைத்து ஏகே62 என மாற்றப்பட்டது. கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.'
2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், படம் 2020 இல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால், படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தை ரத்து செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதே நிலைதான் இப்போது ஏகே62 படத்திற்கும் வந்துள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க லைக்கா திட்டமிட்டிருந்தது, ஆனால் விக்னேஷ் சிவன் கதை திருப்திகரமாக இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை டைரக்டராக்கி உள்ளனர்.இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.
ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் இடம் பெற்றதால் நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்ற ஹேஷ்டேக் நெட்டிசன்களால் டிரெண்டாகி வருகிறது.
இதற்கிடையில் விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் முடிவில் உறுதியாக இருந்த லைகா நிறுவனம் நயன்தாராவின் சமரச வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
ஏகே 62 படத்தின் கதையை அஜித்திடம் சொல்ல நயன்தாரா தான் விக்கியை சிபாரிசு செய்ததாக கூறப்பட்டது, ஆனால் தற்போது அந்த வாய்ப்பு கைநழுவி போனதால் நயன்தாரா கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மகிழ் திருமேனி செல்வராகவன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். முன்தினம் பார்த்தேனே (2010) தடையற தாக்க (2012), மீகாமன் (2014), தடம் (2019), மற்றும் கலக தலைவன் ஆகிய ஐந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய ஆக்ஷன் படமான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ் திருமேனி சொன்ன கதையைக் கேட்டு அஜித் மிகவும் இம்பிரஸ் ஆனதால், உடனடியாக அவருடன் பணியாற்ற சம்மதமும் தெரிவித்துவிட்டாராம். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது போல், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரும் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் அப்படத்தை இயக்காததால், அதிலிருந்து அனிருத்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாக உள்ள ஏகே 62 படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தடம் படத்துக்கு இசையமைத்தவர் ஆவார். அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் இசையமைக்க உள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது டுவிட்டரில் தன்னுடைய பயோவில் "அஜித் 62 இயக்குனர்" என்ற ஹேஸ்டேக்கை நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.