நடிகை சுவாதி விவாகரத்தா?
கணவரை நடிகை சுவாதி விவாகரத்து செய்ய அவர் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்து பிரபலமானவர் சுவாதி. கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை, எட்சன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
2018-ல் விகாஸ் வாசு என்பவரை சுவாதி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வலைத்தளத்தில் இருந்து தனது கணவர் புகைப்படங்களை சுவாதி நீக்கினார். இதையடுத்து கணவரை விவாகரத்து செய்ய அவர் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த மந்த் ஆப் மது பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவாதியிடம் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகி உள்ள தகவல் உண்மையா? இல்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சுவாதி கூறும்போது, "எனக்கு 16 வயது இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானேன். அந்த வயதில் சினிமா உலகில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.
இப்போது எனக்கு பக்குவம் வந்துள்ளது. இந்த விழாவுக்கும் விவாகரத்து தொடர்பான கேள்விக்கும் சம்பந்தம் இல்லை. எனது சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் பேசவும் விரும்பவில்லை. எனவே உங்களின் விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன்'' என்றார்.