ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்: தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை,
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் (viacom) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் பேர்பிளே (Fairplay) என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 29-ந்தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story