தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு


தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2022 3:27 PM IST (Updated: 6 Aug 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.

40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story