காதல் தோல்வியால் அழுதேன் - நடிகை ஆத்மிகா


காதல் தோல்வியால் அழுதேன் - நடிகை ஆத்மிகா
x

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆத்மிகா. தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். காட்டேரி, நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் காதலித்து தோல்வி அடைந்த அனுபவங்களை ஆத்மிகா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஆத்மிகா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு உள்ளது. நானாக காதலை முறிக்கவில்லை. என்னை காதலித்தவர்தான் காதலை முறித்துக்கொண்டு போய் விட்டார்.

காதல் தோல்வி காரணமாக சில தடவை இரவு நேரங்களில் அழுது இருக்கிறேன். காதல் முறிந்து போனதற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன். பணம் புகழ் இரண்டிலும் பணம்தான் இங்கு முக்கியமாக இருக்கிறது. பணம்தான் யதார்த்தம்'' என்றார்.


Next Story