'நான் உயிருடன் இருக்கிறேன்..' - நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பதிவு


நான் உயிருடன் இருக்கிறேன்.. - நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட பதிவு
x
தினத்தந்தி 3 Feb 2024 1:06 PM IST (Updated: 3 Feb 2024 1:12 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலை பூனம் பாண்டேவின் மேலாளர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியாகியுள்ளது. அதில், நடிகை பூனம் பாண்டே, "நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏராளமான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இது முற்றிலும் தடுக்கக்கூடிய நோயாகும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நோயால் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நடிகை பூனம் பாண்டே, தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தாலும், விளம்பரத்திற்காக பூனம் பாண்டே இப்படி செய்துள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.


Next Story