இயக்குநர் ஹரி மகன் ஸ்ரீராம் இயக்கி, நடித்திருக்கும் 'ஹம்' குறும்படம்


இயக்குநர் ஹரி மகன் ஸ்ரீராம் இயக்கி, நடித்திருக்கும் ஹம்  குறும்படம்
x

யூடியூப்பில் ‘ஹம்’ குறும்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குநர் ஸ்ரீராம் ஹரி கூறினார்.

சென்னை,

இயக்குநர் ஹரியின் மூத்த மகன் ஸ்ரீராம் 'ஹம்' (HUM) என்ற படம் மூலம் இயக்குநராகி இருக்கிறார். சுமார் 1 மணி நேரம் ஓடும் இந்தப் படம் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகராகவும் ஸ்ரீராம் அறிமுகமாகி இருக்கிறார். சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் கார்மெலஸ் இசையமைத்து உள்ளார்.

இந்தப் படம் பற்றி ஸ்ரீராம் ஹரி கூறியதாவது: சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். கொஞ்சம் பெரிய படம் பண்ணலாம் என்று நினைத்து உருவாக்கியதுதான் 'ஹம்'. இது என்ன ஜானர் படம் என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்களின் மனநிலையை சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட படம் இது.

அப்பாக்கிட்ட காண்பிச்சப்போ, அவர் முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்திலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். 'இதை, யூடியூப்ல வெளியிட வேணாம். அதுக்குமேல ட்ரை பண்ணுங்க'ன்னு சொன்னார். இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடிக்க ஒருவாரம் ஆச்சு. படத்தை ரெண்டு வாரத்துக்குள்ள எடுத்து முடிச்சுட்டோம். அதுக்கப்புறம், ஓ.டி.டியில கொண்டுவர அப்பாவோட உதவி இல்லாம ட்ரை பண்ணினேன். ஆனா, எதுவும் கிடைக்கல. அதுக்கப்புறம்தான், யூடியூப்ல வெளியிட்டோம்.

என் சித்தி, ஸ்ரீதேவி விஜயகுமார் மருத்துவராக இதில் நடித்திருக்கிறார். அவரிடம் ஐடியாவாக சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தை முடித்துவிட்டு எங்கள் குடும்பத்துக்கு திரையிட்டுக் காண்பித்தேன். ஒவ்வொருவரின் எக்ஸ்பிரஷன்களில் இருந்து நான் புரிந்துகொண்டேன்.

யூடியூப்பில் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது 'துப்பறிவாளன் 2' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு ஸ்ரீராம் ஹரி கூறினார்.


Next Story